மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கணித கண்காட்சி



 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலத்தில் நேற்று (12) வெள்ளிக்கிழமை வலய மட்ட கணித கண்காட்சி இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இடைநிலை பிரிவு பாடசாலைகளை இணைத்து மாணவர்களினால் செய்யப்பட்ட பல்வேறு கணித ஆக்கங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான விளக்கங்களும் மாணவர்களினால் செய்முறை ரீதியாக முன்வைக்கப்பட்டன

வலய கல்வி பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான வை. சி.சஜீவன், தே. உதயகரன், உதவிக்கல்வி பணிப்பாளர் சி. தீபதர்சன், கோட்டக்கல்வி பணிப்பாளர் மூ. உதயகுமாரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறந்த ஆக்கங்களுக்கு மதிப்பீட்டின் அடிப்படையில்  பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.