ஜப்பானில் இலங்கையர் கைது !


ஜப்பானின் டோக்கியோ நகரில் ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தனது கழுத்தை அறுக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தைக் கண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், பின்னர் அப்பகுதிக்கு வருகை தந்த சுமார் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த குறித்த இலங்கையர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.