சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !


கட்டான - திம்பிரிகஸ்கடுவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (11) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 60 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் திம்பிரிகஸ்கடுவ பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கட்டான பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.