சகல மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு மதுபானங்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் !


சகல மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணம் வெள்ளிக்கிழமை (12) உடன் அமுலுக்கு வரும் வகையில் 100 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் ஜனாதிபதியின் செயலாளரினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வருடாந்த மதுவரி கட்டணம், தொழிற்சாலைக்காக ஒரே தடவையில் அறவிடப்படும் கட்டணம் மற்றும் காப்புறுதி ஈட்டு வைப்பு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 2026.01.01 ஆம் திகதி முதல் புதிய கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்தால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக்கூடும் என இலங்கை மதுபான அனுமதிப்பத்திர சங்கம் தெரிவித்துள்ளது.