மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய பொலிஸார் இன்று வியாழக்கிழமை (01) விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இந்த விசேட நடவடிக்கையில் 75 சதவீதமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.






.jpeg)


.jpeg)



.jpg)