போலித் தங்க ஆபரணங்களைத் தயாரித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரிவு அதிகாரிகளினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்ட கொலன்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய சந்தேகநபர் ஹையந்துடுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






.jpeg)


.jpeg)



.jpg)