கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது !


150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 30,000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும் குறித்த பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, 2,420 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்த அரை ஏக்கர் நிலப்பரப்பையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதே பகுதியில் சுற்றிவளைத்துள்ளதுடன், அங்கும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.