ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை !



பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து வத்தளை நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை (30) கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருப்பதால் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.