ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கூட்டாளி ஒருவர் பொலிஸாரால் கைது !


கந்தர - தெவிநுவர பிரதேசத்தில் 115 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின், 23 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலின் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், நேற்று (31) பிற்பகல் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 38 வயதுடைய தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த சந்தேகநபர் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நெருங்கிய சகாவென்பதும், அந்தக் கடத்தல்காரரின் கடத்தல் மூலம் ஈட்டப்படும் பணம் தொடர்பான விடயங்களை இவரே கையாளுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (01) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.