சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.!


(அஸ்லம் எஸ்.மெளலானா)


நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் நாளைய தினம் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.