சட்டத்தரணி ஒருவரை குற்றவியல் ரீதியாக மிரட்டி அவரது காரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (03) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய இரண்டு சட்டத்தரணிகளை வீதியை மறித்து, காரைச் சுற்றி வளைத்து, கொலை மிரட்டல் விடுத்து, வாகனத்தைத் தாக்கியமை தொடர்பில், மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, மிரிஹான பொலிஸ் உட்பட மூன்று குழுக்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்தது.
அதற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை (02) மாலை, நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, ஹக்மனை பொலிஸ் பிரிவின் பு{ஹவெல்ல பகுதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (03) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேகநபர்கள் 31 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும், பு{ஹல்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.










.webp)

.jpeg)
