சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!


கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின், "கிரீன் சேனல்" வழியாக, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை (02) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கண்டி - அங்குரன பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் நேற்று காலை 08.00 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக இந்தியாவின் பெங்களூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து, 48,900 யூரோக்கள், 14,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 26,650 இந்திய ரூபாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.