குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்



குருணாகலை - பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10) பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவலில், தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.