ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ,இம்மாத இறுதியில் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய மாணவர் சங்கங்களில் உரையாற்றவிருந்தார்.
இதற்கு எதிராக பிரித்தானியா முழுவதும் வாழும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்புக்களின் விளைவாக, கேம்பிரிட்ஜ் மாணவர் சங்கத்தில் உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.












.jpeg)