இளைஞன் ஒருவன் பூனையை சித்திரவதை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் பரவின. இந்த காணொளிக்கு விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (8) வலப்பனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அன்றையதினமே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.













