மொசாம்பிக் அரசாங்கம், இலங்கை உட்பட 183 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்காக உத்தியோகபூர்வ e-Visa இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
“Visit Mozambique” முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த டிஜிட்டல் மயமான e-Visa முறைமை, அந்நாட்டின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் எல்லை நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமை, சுற்றுலா மற்றும் முதலீட்டு வருகைகளை அதிகரிப்பதற்கான அரசின் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது.
உலகளாவிய நம்பகமான தொழில்நுட்ப சேவைகளில் முன்னணியில் உள்ள VFS Global நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த தளம் செயல்படுகிறது.
புதிய முறைமை, மேம்பட்ட தானியங்கி செயல்முறை, பாதுகாப்பான தரவு செயலாக்கம் மற்றும் கிளவுட் அடிப்படையிலான கட்டமைப்பை கொண்டதாகும். இதன் மூலம், 183 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் [https://evisa.gov.mz/](https://evisa.gov.mz/) என்ற தளத்தின் மூலம் இணையத்தளத்தில் பாதுகாப்பான முறையில் விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஒருங்கிணைந்த முறைமை சுற்றுலா விசா, வணிக விசா, கப்பல் பணியாளர் (Crew Transhipment), விளையாட்டு மற்றும் கலாச்சாரம், மனிதாபிமான உதவி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான விசாக்கள் போன்ற விசா மற்றும் ETA வகைகளை உள்ளடக்கியதாகும். குறுகிய கால விசாவிலிருந்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் நீண்டகால விசாக்கள் வரை ஒரே தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.












.jpeg)