Associated Press வெளியிட்ட தகவலின்படி, ஈரான் இராணுவ பேச்சாளர் ஜெனரல் அபோல்ஃபஸ்ல் ஷேகர்ச்சி, “பூங்காக்கள், பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட உலகளாவிய பொது இடங்கள், ஈரானுக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளை உலகம் முழுவதும் தேடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் போர் மண்டலங்களுக்கு வெளியே, தனிப்பட்ட பயணங்களில் இருந்தாலும் இலக்காகக் கொள்ளப்படலாம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், உலகளாவிய பாதுகாப்பு குறித்து கவலைகளை அதிகரித்துள்ளது.




.webp)


.jpg)
.webp)




