வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கேற்ப எரிபொருள் விநியோகம்: இன்று யாருக்கு முன்னுரிமை ?


எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறை நேற்று வியாழக்கிழமை (19) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (20) வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண் ( 0, 2, 4, 6, 8) கொண்ட வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

நேற்று இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாகக் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.

கியூ.ஆர் குறியீட்டு முறையிலான எரிபொருள் விநியோகம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 6 இலட்சம் புதிய கியூ.ஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.