ஜனாதிபதியின் விசேட உத்தரவு கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவத்தினரின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணி முன்னெடுப்பு
மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு, மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் இன்றைய தினம் இரண்டு காட்டு யானைகள் மாந்தீவில் சஞ்சரிப்பதை பிரதேசிவாசிகள் அவதானித்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு விடுத்த அழைப்பிற்கு உடனடியாக வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், இராணுவத்தினர் மாந்திவில் நிலை கொண்டுள்ள காட்டு யானைகளை களத்தில் நின்று காட்டு யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தக் காட்டுயானைகள் கூட்டம் வவுணதீவு, ஆயித்தியமலை பிரதேசம் முழுவதும் உணவுதேடி சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது யானை மனித மோதலை தொடர்ந்து மாந்தீவு நிலப்பரப்பிற்குள் சஞ்சரித்த காட்டு யானை கூட்டத்தை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருந்த போதும் யானைக் கூட்டம் மாந்தீவு பகுதியில் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.








.jpg)
.webp)
.webp)



.webp)
