
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் விரைவில் குறைக்கப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய அருகில் இருப்பதாகவும், இதனால் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பாக, அதை பயன்படுத்தும் நாடுகளே தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா அதில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதேவேளை, உலக எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடலில் இருக்கும் ஈரான் எண்ணெய் மீது அமெரிக்க நிதியமைச்சு தற்காலிகமாக தடைகளை தளர்த்தியுள்ளது.
இந்த “குறுகிய கால அனுமதி” மூலம் சுமார் 140 மில்லியன் பேரல் எண்ணெய் உலக சந்தைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்படும் உயர்வை கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



.webp)


.jpg)
.webp)




