
SriLankan Airlines நிறுவனம், கொழும்பு மற்றும் டுபாய் இடையே இயக்கப்படும் UL231 மற்றும் UL232 என்ற விமானங்களை மார்ச் 21 முதல் 24, 2026 வரை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் தங்களது விமான நிலை தொடர்பான புதுப்பிப்புகளை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உதவி தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலும் அல்லது சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற எண்ணிலும் உள்ள Global Contact Centre-ஐ தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அருகிலுள்ள SriLankan Airlines அலுவலகம் அல்லது டிக்கெட் பெற்ற பயண முகவரை தொடர்புகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இடையூறுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ள SriLankan Airlines, பயணிகளின் பொறுமைக்கும் புரிந்துணர்விற்கும் நன்றி தெரிவித்துள்ளது. மேலும் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



.webp)


.jpg)
.webp)




