இவ்விபத்து இன்று (29) புதன்கிழமை பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் அட்டன் – போடைஸ் வழியாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றது.
மற்றொரு பஸ்ஸூக்கு இடம் கொடுக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேரத்தில் பஸ்ஸில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.






.jpg)






