கொழும்பு 11, ஐந்தாவது குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் (திடீர் சோதனையை மேற்கொண்ட போது, ஒரு கிலோகிராம் 240 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட சம்பா அரிசி, அங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
குறித்த வர்த்தக நிலையத்தில் 5 கிலோகிராம் சம்பா அரிசி பொதி 1425 ரூபாய்க்கு அதாவது ஒரு கிலோ அரிசி 285 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வர்த்தகர் இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றங்களுக்காக இரண்டு முறை தண்டிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு (2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்று மக்களைச் சுரண்டும் வர்த்தகர்களுக்கு எதிராக நாடு முழுவதும் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.






.jpg)






