செங்கலடியில் மே தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை: வர்த்தக சங்கம் வேண்டுகோள்



(செங்கலடி நிருபர் சுபா)

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செங்கலடி நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் எதிர்வரும் மே முதலாம் திகதி விடுமுறை வழங்குமாறு ஏறாவூர் பற்று - செங்கலடி வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை கௌரவிக்கும் விதமாகவும், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மே மாதம் 01 ஆம் திகதியை விசேட விடுமுறை தினமாக அறிவிக்க சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் க.ஜெகன்  விடுத்துள்ள அறிவித்தலில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன:

  • மே முதலாம் திகதி (01.05.2026) வெள்ளிக்கிழமை அன்று அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி முழுமையான ஒத்துழைப்பை வழங்குதல்.

  • தமது நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் முழுமையான விடுமுறையை வழங்குதல். 

  • "தொழிலாளர் உழைப்பைப் போற்றுவோம் - ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில், தொழிலாளர்களின் உழைப்பைப் போற்றும் இந்த உன்னத தினத்தில் அனைத்து வர்த்தகர்களும் ஒருமித்த கருத்துடன் சங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 0782360795 அல்லது 0775787148 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.