பாரியளவு போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது


பெருமளவிலான கேரளா கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கேரளா கஞ்சா தொகுதியுடன் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் ஹொரண முகாமில் உள்ள தலைமையக விசேட செயல்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ, ரதனஜோதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்தச் சோதனையை நடத்தியது.

'பொம்புவல நவீன்' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 'நுவான் இரேஷ் பெர்னாண்டோ' எனும் போதைப்பொருள் கடத்தல்காரரின் விநியோகஸ்தராகச் செயல்பட்ட, 'பட்டி அக்கா' என அழைக்கப்படும் 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அந்தப் பெண்ணிடமிருந்து 02 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா, 110,000 ரூபாய் பணம் மற்றும் ஒரு மின்சாரத் தராசு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.