சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் போதையற்ற சமூகம் கட்டி எழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி சமூகத்துடன் இணைந்ததாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினால் போதைப் பொருள் பாவனையால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்க்கும் செயல்மர்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளையோரின் நலனைக் மேம்படுத்தும் பயிற்சியானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் பிராந்தியி சுகாதார சேவைகள் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரத்தினம் அவர்கள் சமூக மட்டத்தில் பண்பாட்டு ரீதியாக பொருத்தமான தலையீடுகளை உறுதி செய்ய அரச துறைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டினார்.
இதன்போது கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்திய பிரதேச செயலாளர் சுகாதாரத் தரப்பினரால் இங்கு கவுரவிக்கப்பட்டார்
வாழைச்சேனை மருத்துவ சுகாதார அலுவலர் வைத்தியர் பாமினி அவர்களினால் சிறுவர்களில் அறிவாற்றல் நடத்தை வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பாடசாலை மற்றும் சமூக சூழலில் CBT பயன்பாடு குறித்து விளக்கங்களை வழங்கி வைத்தார்
இந் நிகழ்வில் ஆசிரியர் ஆலோசகர்கள், சுகாதார சேவைகள் இளைஞர் மையபணியாளர்கள், மாவட்ட செயலக உளவியல் சமூகப் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

















.jpg)