அரசாங்கம் 8000 மில்லியன் ரூபாய் வரி வருமானத்தை இழந்துள்ளது - எஸ்.எம்.மரிக்கார்



அரசாங்கம் 8000 மில்லியன் ரூபாய் வரி வருமானத்தை இழந்துள்ளது என எதிர்க்கட்சியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சபையில் தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதியின்போது அறவிடவேண்டிய வெற் வரியை அறவிடாத காரணத்தால் இந்த வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.