.png)
காலி - தங்கெதர, டிக்ஸன் சந்தி பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், உடனடியாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காலி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் அல்லது தாக்குதல்தாரிகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



.jpg)







