பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை


நாட்டின் சில பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

அதற்கமைய, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (19) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.