இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற கூட்டறிக்கையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
"வியட்நாம் ஏர்லைன்ஸ்" இவ்வருடத்திற்குள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகத் தொடர்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பெறுமதியை 2030 ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
அனைத்துத் துறைகளிலும் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த வியட்நாம் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி தோ லாம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான வியட்நாமின் இந்த ஒத்துழைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




.jpg)







