வெப்பமான வானிலை தொடர்பான அறிவிப்பு



நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இன்று (07) பிற்பகல் 03.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, நாளை (08) தினத்திற்குச் செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேர வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது "கவனம் செலுத்த வேண்டிய" மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இது குறித்து அவதானம் செலுத்தி மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.