.jpeg)
பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து: மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால், சில பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாகப் பல பகுதிகளுக்கான போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
அதிகாரிகளின் அறிவுறுத்தல்: மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை பதிவாகியுள்ள பகுதிகள்: பதுளை மாவட்டத்தின் பசறை, பதுளை நகரம், ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் தொடர்ச்சியாகக் கடும் மழை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது



.jpg)








