.jpeg)
பல்கலைக்கழகங்களில் நிலவும் 3000க்கும் அதிகமான விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதுடன் கல்வி சாரா ஊழியர்கள் வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதேநேரம் உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஆராய்ந்து வருகிறோம் என கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்னாக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோறாறியவர்கள் இம்முறை பல பாடங்களுக்கும் தோற்றிய மாணவர்கள் 2,81,810 பேர். இவர்களில் பல்கலைக்கழக பிரவேசத்துக்கான அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளவர்கள் 1, 76, 530 பேர் ஆவர்.
இவர்களில் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 937 பேர் ஆகும். 2025 - 2026 ஆண்டுக்காக இரண்டு புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 26 செப்டம்பர் முதல் வாரத்தில் மேற்படி பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
உயர்கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை மட்டும் வரைவு ஒன்றை தயாரிப்பதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அந்தக் குழு கடந்த ஆறு மாதங்களாக அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
உயர்கல்வி என்பது பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. அது அதனை விட விரிவானது. தொழில் கல்வியிலும் உயர் கல்வி அவசியமாவதால் இவை அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலேயே மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவானது தற்போது நடைமுறையில் உள்ள உயர்கல்வியில் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் தொடர்பிலேயே ஆராய்கின்றது. விரைவில் அந்த அறிக்கை பெற்றுக் கொள்ளப்படும்.
பொதுவான கல்வி மறு சீரமைப்பிற்கு இணைந்ததாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் அவர்கள் ஆராய்கின்றனர். அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய நாம் எதிர்காலத்தில் உயர்கல்வியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் திட்டங்களை மேற்கொள்வோம்.
ஏவ்வாறாயினும் மேற்படி குழுவின் அறிக்கை மற்றும் அதற்குப் பின்னரான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கேள்விக்கு ஏற்ப பாடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய பல்கலைக்கழக பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அவற்றுக்குத் தேவையான வசதிகள், ஆளணிகள் தொடர்பான திட்டமிடல் இடம் பெறவில்லை.
எனினும் தற்போது சிறந்த முறையில் அவற்றை முன்னெடுக்கும் வகையில் ஆளணிகளை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.
பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை கற்பித்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேலதிகமாக போதுமான ஆளணிகள் தேவைப்படுகின்றன.
இவை அனைத்தையும் ஆராய்ந்து கவனத்திற் கொண்டு நாம் மேற்படி குழுவின் மூலமே அதன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கு இணங்கவே நாம் ஆளணிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
2022 ஆம் ஆண்டு முதல் வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலை காணப்படுவதால் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு பல்கலைக்கழகங்கள் கோரும் எண்ணிக்கையை கவனத்திற் கொண்டு விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 3000 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அந்த வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கல்வி சாரா ஊழியர்கள் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.