கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் கொலை: சந்தேகநபர் காயங்களுடன் கைது!


காலி - பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரங்கல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (06) இரவு குறித்த நபருக்கும் மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது அங்கிருந்த ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.