டேம் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல்...!


 கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது

இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 10 தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்களோ அல்லது தீயிற்கான காரணமோ இதுவரை கண்டறியப்படவில்லை.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.