தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல் - குடிநீர் நிலைகள் பாதுகாப்பற்றவை என எச்சரிக்கை


தெனியாய நகரம் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர் நிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் என்.ஜி.எஸ். பண்டிதரத்ன தெரிவித்துள்ளார்.


தெனியாய பகுதியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அடையாளம் காணப்பட்ட நீர் நிலைகளில் தற்போது குளோரின் இடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் இதுவரை 50 நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.