இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ


வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாக, அவர் இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

பின்னர் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியதுடன், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பல ஆதரவாளர்கள் அவ்விடத்துக்கு வருகை தந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.