சிறைக்கைதியுடன் தொலைபேசி உரையாடல் : முஜிபுர் ரஹ்மானிடம் CID விசாரணை!



கண்டி - போகம்பரை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அந்த கைதியுடன் 53 தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் பாரதூரமான குற்றங்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.