
இதுதொடர்பாக 1990 சுவ செரிய அறக்கட்டளையின் தலைவர் மேஜர் (ஓய்வுபெற்ற) நிரோஷன் ரத்நாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை (சுவ செரிய) செயலிழக்கப் போவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அற்பத்தனமானவை மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதை சுவ செரிய அவசர ஆம்புலன்ஸ் சேவையின் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.
1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையானது நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியாக இயங்கி வருவதுடன், வழமை போன்று பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் உயர்தரமாகவும் திறமையாகவும் வழங்கி வருகிறது.
அதேபோன்று, இந்த மனிதாபிமான சேவை எதிர்காலத்திலும் எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதையும் வலியுறுத்திக் கூறுகிறோம்.' அவசர தேவைகளுக்கு: 1990 அல்லது 1094 11 204 5801 ஆகிய இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.


