வஸ்கடுவையில் 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, குஷ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது


 வஸ்கடுவை பகுதியில் 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் 30 கைக்குண்டுகளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் திங்கட்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 கிராமுக்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் பெறப்பட்டது என சந்தேகிக்கப்படும் 98 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரிடமிருந்து மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதனைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்ச ஆகியோரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.