இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் தமிழ் மற்றும் தமிழ் மொழிக் கற்பித்தலில் சிறப்புப் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.


(சித்தா)
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் வவுனியா கற்றல் நிலையத்தினால் தமிழ் மற்றும் தமிழ் மொழிக் கற்பித்தலில் சிறப்புப் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தகுதியாக பின்வரும் தேவைகள் காணப்படுகின்றன. தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு க.பொ.த. உயர்தரத்தில் குறைந்தது 3 பாடங்களில் சித்தி அல்லது தமிழ் மொழியில் க.பொ.த. உயர்தரத்தில் 03 தேரச்சிகள் அத்துடன் க.பொ.த.சாதாரண தரத்தில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தில் பி தரத்தினைப் பெற்றிருத்தல் அல்லது தேசிய கல்வியற் கல்லூரியில் பெற்ற தேசிய கற்பித்தலில் டிப்ளோமா (தமிழ்) பூர்த்தி செய்திருத்தல் அல்லது செனற் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணையான அல்லது உயர்வான கல்வித் தகுதி என்பனவாகும்.

மேலும் விபரங்ளை அறிய 024 2222995 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது  www.ou.ac.lk   உடனான தொடர்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ளமுடியும்.
மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.