வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வரலாற்றுப் பயணத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் முகமாக 2003 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் தாராள நன்கொடையால் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் நோக்குடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன கலைமேடை இன்று 04.06.2026 பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் - சிறிதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் அ.ஜெயப்பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் - சிறிதரன், சிறப்பு விருந்தினர் பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, கௌரவ விருந்தினராக ஓய்வு நிலை ஆசிரியர் சி.ஜீவமணி ஆகியோருடன் ஆன்மீக அதிதிகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இக் கலைமேடையில் வரவேற்பு நடனம் சிறப்பான முறையில் இடம்பெற்று ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் நடந்தேறின.



.jpeg)


.jpeg)


.jpeg)




.jpeg)

