அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது


அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 05 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 02 போலி இலக்கத் தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர ஹோகந்தர பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அத்துருகிரிய பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.