சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பிரிவை தொடர்புகொள்ள துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்


டெங்கு பரவல் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்குமாகச் சுகாதார மற்றும் ஊடகத்துறை கீழ் இயங்கும் 'விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பிரிவை' தொடர்புகொள்வதற்காக 011 – 7966366 எனும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த விசேட நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. டெங்கு பரவல் தொடர்பான அவசரத் தகவல்கள் மற்றும் பொதுமக்களின் முறைப்பாடுகளைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு விரைவாகக் கொண்டுசெல்லும் நோக்கில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படத்தப்பட்டுள்ளது.