குடும்பத் தகராறு காரணமாக கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழப்பு!


 அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (03) இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறொன்றின் போது, கணவனால் தாக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிம்பொகுண, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் கொடூரத் தாக்குதலாக மாறியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த பெண், ஆபத்தான நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரலகங்வில பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான பெண்ணின் கணவரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.