.jpg)
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் விடுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பல்கலைக்கழகம் மீண்டும் ஜூலை மாதம் 13ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.








.jpg)
.png)
.jpg)


