.jpeg)
ரவிப்ரியா
.இலங்கை கிறீன் பிளான் ரேசன் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி மாலன் பிரான்சிஸ் பீட்டர்ஸின் எண்ணக்கருவில் உருவான இலங்கையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை விநியோகிக்கும் 'பசுமை வருகை' வேலைத்திட்டத்தில் கல்முனை பிராந்திய கிளையும் இணைந்து கொண்டது. இத்திட்டமானது மனிதவள பணிப்பாளர் திருமதி இரேஷா நிமந்திகா விக்கிரமசிங்க வழிகாட்டலில் பொசோன் தினத்தை முன்னிட்டு தான சாலைக்குப் பதிலாக நாடளாவிய ரீதியில் கடந்த சனிக்கிழமை காலை மரக்கன்றுகள் விநியோகம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அந்த வகையில் கல்முனை பிராந்திய கிளையினர் கல்முனை சுற்றுச் சூழலில் உதவி பொதுமுகாமையாளர் மூ.மதன் தலைமையில் சுமார் 800 மாதுளை மற்றும் கொய்யா கன்றுகளை பயனாளிகளுக்கு பொசோன் தானமாக வழங்கி வைத்தனர்.











.jpg)

.png)

.jpg)