கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 7.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட குறித்த போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தனது சகோதரரைச் சந்திப்பதற்காக கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்திருந்த அவர் மற்றும் நண்பர், கல்லடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு, புதன்கிழமை (29) இரவு குறித்த உணவகத்தில் சோதனை மேற்கொண்டது.
அதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், இருவரும் கைது செய்யப்பட்டனர்.





.jpg)







.jpg)
