தேவிநுவர பகுதியைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது மகன் சௌந்த ஹன்னாடிகிபியாவத்த ஆகியோர் மகேஷ்காலி கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை (25) மீட்கப்பட்டதாக பங்களாதேஷின் Prothom Alo செய்தி வெளியிட்டுள்ளது.
கடலுக்குச் சென்ற ஏழு நாட்களிலேயே உணவு தீர்ந்ததால், அடுத்த 29 நாட்கள் மீன்பிடி தூண்டிலும் கடலில் பிடித்த பச்சை மீன்களையும் உணவாக உட்கொண்டு உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பங்களாதேஷ் மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்ததுடன், இருவரும் தற்போது மகேஷ்காலி பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளனர். சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் விரைவில் இலங்கைக்கு திரும்ப உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






.jpg)


.jpg)


.jpg)

