அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை இணையவழியில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்குள் பிரவேசித்து “எங்கள் சேவைகள்” (Our Services) என்பதன் கீழ் உள்ள “Exam Information Centre” ஊடாகவோ அல்லது onlineexams.gov.lk என்ற இணையவழிப் பரீட்சை சேவை முறைமை ஊடாகவோ சம்பந்தப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










.jpg)



